இதோ உங்கள் தினசரி பலன்களை அறிந்துகொள்ள அரியதோர் மென்பொருளை இலவசமாக பெற    இங்கே செல்லவும்

CURRENT MOON
தற்பொழுதிய சந்திர பிறை (திதி)

தினம் ஒரு பழமொழி

தினம் ஒரு திருக்குறள்

free counters
MyFreeCopyright.com Registered & Protected
SRI PARAMANANTHAM ASTRO


   

  

  

  


இந்த இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கவும்

 நவரத்தின சாஸ்திரம் 

     அரிய மென்நூல்(மின்னூல்)

நவரத்தினங்கள் பற்றிய அரிய விடயங்கள் அடங்கிய மென்னூல்

நவரத்தின மருத்துவ குணங்கள்
நவரத்தின முழுமையான பயன்பாடுகள்
பயன் படுத்தும் விதம்  என்னும் பல விடயங்கள்......


அரிய எண் ஜோதிட மென்நூல்(மின்னூல்)

P.K Neumerolgy book.pdf P.K Neumerolgy book.pdf
Size : 3192.526 Kb
Type : pdf

எண் ஜோதிட அடிப்படை விஞ்ஞானம்,பிறந்த திகதி பலன்,பெயர் பலன்,பெயர் அமைக்கும் முறை, தமிழ் எண் ஜோதிடம், பெயர் ரகசியங்கள்  மேலும் பல அரிய விடயங்கள்அடங்கியது

சித்த மருத்துவ புதையல் மென்நூல்(மின்னூல்) 

ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் எத்தனை நாட்களுக்கு பிறகு தீரும்?

ஜோதிட சாஸ்திர விதிகளின் படி ஒரு மனிதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அந்த மனிதனுக்கு அந்த வியாதி எந்த நட்சத்திரத்தில் ஏற்பட்டால் எவ்வளவு நாட்களில் தீரும்  என்று சொல்லப்பட்டிருக்கிறது.  

·        அசுவினியில் ஏற்பட்டால்  அசுவினியில் வரும் காய்ச்சல்  7 அல்லது 9 ம் நாளன்று குணமாகும்.  

·        பரணியில் வரும் காய்ச்சல் 5 ம் நாளில் கடுமையாகி, 8  ம் நாளில் விடும்.  

·        கார்த்திகையில்  வருவது, 8  ம் நாளில் தீராவிடில் 20 நாளில் கொல்லும். 

·        ரோஹிணியில் வருவது 8 அல்லது 20 நாளில் விடும். 

·        மிருகசீரிடத்தில் காண்பது  8 ம் நாளில் தீரும். 

·        திருவாதிரையில்  வருவது 5 நாளில் வலுத்து 30 நாளில் விடும்.   

·        புனர்பூசத்தில் வருவது 6 ம் நாளில் தீரும். 

·        பூசத்தில் வருவது 2 அல்லது 8 ம் நாளில் அகலும். 

·        ஆயில்பதில் வருவது 7 ம் நாளில் கடினமுற்று    20 ம் நாளில் கொல்லும்.  

·        மகத்தில் வருவது 12  அல்லது 20 நாளில் அகலும். 

·        பூரத்தில் வருவது 10 அல்லது 30 ம் நாளில் தீரும். 

·        உத்திரத்தில் வருவது 18  நாளில் தீராவிடில் 90  நாளில் தீரும். 

·        சித்திரையில்  வருவது 8 நாளில் தீராவிடில் 90 நாள் ஆகும்.   

·        சுவாதியில் காண்பது 5 ம் நாளில் தீராவிடில் 18  நாள் ஆகும்  

·        விசாகத்தில் வருவது 8 நாளில் விடாவிடில் 30 நாளில் குணமாகும். 

·        அனுஷத்தில் வருவது 12  ம் நாளில் தீரும். 

·        கேட்டையில் வருவது 5 நாளில் வலுத்து 30 நாளில் விடும். 

·        மூலத்தில் வருவது 5 நாளில் தீராவிடில் 20 ம் நாளில் தீரும். 

·        பூராடத்தில்  வருவது 6 ம் நாளில் தீராவிடில் 18  ம் நாளில் கொல்லும். 

·        உத்திராடத்தில் வருவது 7 நாளில் கடினமாகி 25 ம் நாளில் தீரும் . 

·        திருவோணத்தில் வருவது 7 ம் நாளில் தீராவிடில் 210  நாள் ஆகும்.

·        அவிட்டத்தில் வருவது 5 ம் நாளில் கொல்லாவிடில் 17 நாளில் விலகும். 

·        சதயத்தில் வருவது 5 ம் நாளில் வலுத்து 15  ம் நாளில் விடும் . 

·        பூரட்டாதியில் வருவது 7 ம் வலுத்து 15 நாளில் அகலும். 

·        உத்திரட்டாதியில் வருவது 7 ம் நாளில் தீராவிடில் 15 நாளில் கொல்லும். 

·        ரேவதியில்  வரும் காய்ச்சல் 8 ம் நாளில் மரணத்தை விளைவிக்கும்.   

 

தானத்தின் சிறப்பு !!

சிறந்த சேவை என்றால் தானம் செய்வதே ஆகும், தானங்களில் சிறந்த தானம் அன்னதானம் என்றே அனைவரும் கூறுவர், அன்னதானத்தை போல பல தானங்கள் உள்ளன அவற்றின் பலனை இங்கே தெரிந்து கொள்வோம்.

அன்னதானம் செய்பவர்களுக்கு – இறைவன் அருள் கிட்டும்.
அரிசிதானம் செய்பவர்களுக்கு – பாவங்கள் அகலும்.
ஆடைதானம் செய்பவர்களுக்கு – ஆயுள் அதிகரிக்கும்.
தேங்காய்தானம் செய்பவர்களுக்கு – காரியங்கள் கைகூடும்.
நெய்தானம் செய்பவர்களுக்கு – நோய்கள் நீங்கும்.
தேன்தானம் செய்பவர்களுக்கு – குழந்தை பாக்கியம்.

எந்த பொருளாக இருந்தாலும் தானாம் செய்தால் அதற்கான பலன்கள் நம்மை வந்து சேரும்.எதிர் காலம் என்பதே நமது ராசி மற்றும் நச்சதிரத்தை பொறுத்தே உள்ளது,கிரகங்களின் மாறுபாடுகளால் உண்டாகும் பிரச்சனைகளை பரிகாரங்கள் அல்லது கோவில் வழிபாடுகள் மூலம் சரி செய்யலாம்.

யாருக்கு இரண்டு திருமணம் நடக்க அதிக வாய்ப்புண்டு?
ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டில் ராகு மேஷம்
கடகம் சிம்மம் கும்பம் பகை ; ரிஷபம் நீச்ச வீட்டில்
அல்லது கேது மேஷம் கடகம் பகை ; சிம்மம் நீச்ச
வீட்டில்
இருந்தால் அதுவும் கூடவே எட்டாம் வீட்டு
அதிபதி தசை
நடந்தால் கேட்கவே வேண்டாம்.

இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன்
தொடர்புடையவன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான்.
சோம்பல் உடனிருக்கும். மன சஞ்சலம் உடையவன்.
சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதான
காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத்
திறந்தால் சண்டைதான்.

மூலநட்சத்திரம் மாமனை கொல்லுமா? 

மூல நட்சத்திரத்தில் பிறந்து லக்னத்திற்கு மூன்றாம்
வீடாகிய மாமனார் வீட்டில் கேது அமர்ந்து இருந்தால்
மாரக இடமான 4ல் 9ல் கேது அமர்ந்து இருந்தால்
மாமனாருக்கு கண்டம் உண்டாக்கும். மற்றபடி மூல
நட்சத்திரத்தால் மட்டும் மாமனாருக்கு ஆபத்தை
உண்டாக்காது.


ஆயிலியம் மாமியாருக்கு ஆகாதா?
ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி
ஆயில்யம் - புதன் - விஷ்ணு ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

"அவள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவள்.

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பார்கள்"

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்ப லக்கினமாக
இருந்தால் எந்தத் தீங்கும் நேராது
ஒரே லக்கினக்காரர்கள் என்பதால் வரன் , மாமியார்
இருவருடைய குணங்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஒற்றுமையாக இருப்பார்கள் அல்லது விட்டுக் கொடுத்துப்
போய்விடுவார்கள்.

ஆயில்யம் நட்சத்திர வரனின் ஜாதகத்தில் 11ம் வீடு ,
11ம் வீட்டு அதிபதி , 11ல் அமரும் கிரகம், 11ம் வீட்டை
பார்க்கும் வலுவாக இருந்தால் மாமியாருக்கு பாதிப்பும்
இல்லை.

ஆயில்யம் நட்சத்திரனின் மாமியாரின் ஜாதகத்தில் 8ம்
வீடு , 8ம் வீட்டு அதிபதி , 8ல் அமரும் கிரகம், 8ம் வீட்டை
பார்க்கும் வலுவாக இருந்தால் பாதிப்பும் இல்லை.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு வரன் தேடும்
போது வரன் , மாமியார் இருவர் ஜாதகத்தையும் கேட்டு
வாங்கி பொருத்தம் பாருங்க. மாமியார் ஜாதகத்தில்
உடல் குறைபாடு , ஆயுள் எப்படி இருக்கு என்று பாருங்க.
அதைவிட்டு ஆயில்யம் நட்சத்திரமா வேண்டாம் என்று
ஒதுக்காதிற்கள்

ஜாதகத்தில் ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி லக்கினம்
மேஷம் முதல் மீனம் அந்த தசை புக்தி காலங்களில் இந்த
மாமியாருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

லக்கினம்

மேஷம் 80%
ரிஷபம் 70%
மிதுனம் 50%
கடகம் 90%
சிம்மம் 50%
கன்னி 70%
துலாம் 80%
விருச்சிகம் 90%
தனுசு 60%
மகரம் 80%
கும்பம் 60%
மீனம் 90%

Example : 01. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கடகம்
லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 90%
நேராது.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம்
13/09/2007ல் நடந்தது.

Example : 02. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு
லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60%
நேராது.

Example : 03. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்
மிதுனம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத்
தீங்கும் 50% நேராது.

Example : 04. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்
கும்பம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத்
தீங்கும் 60% நேராது.

எந்த நோய்க்கு எந்த கிரக வழிபாடு அவசியம் ?

ஜோதிட சாஸ்திர விதிப்படி , மனிதனாக பிறந்த ஒரு சாதகனின் பூர்வ ஜென்ம கர்மாக்களை தரம் பிரித்து , பலா பலன்களை தெளிவாக தருவது - நவ கிரகங்களே. ஒன்பது கிரகங்களும் , அதற்கேற்ப பன்னிரண்டு வீடுகளில் அமர்ந்து , இந்த நேரத்தில் , இந்த பலன்கள் என்று தெளிவாக கிடைக்க வைக்கின்றன.

என்னுடைய அனுபவத்திலும், ஆராய்ச்சியிலும் - கிடைத்த ஜாதகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது , பெரும்பாலான நடந்து முடிந்த அசம்பாவிதங்களுக்கு - நவ கிரகங்களின் பங்களிப்பு பெரும்பாலும் ஒத்துப் போவதை உணர முடிந்தது. அதை வைத்து எனக்கு கிடைத்த சிறு ஞானத்தால் , வர விருக்கும் இன்னல்களை முடிந்த அளவுக்கு , தகுதி உள்ள அன்பர்களுக்கு பக்குவமாக எடுத்துக் கூறி - ஓரளவுக்கு தவிர்த்தும் இருக்கிறேன். அதற்க்கு அந்த ஜாதகரின் கிரக ஒத்துழைப்பும் இருத்தல் அவசியம். அவர்களுக்கு தெய்வ நம்பிக்கையும், செய்யும் பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் , முழு மனதோடு செய்வதும் முக்கியம். 
  
கோடிகளில் பணம் கொட்டிக் கிடந்தாலும், நோய் என்று ஒன்று வந்தால் , அதுவும் எளிதில் தீராத வியாதி என்றால் முடிந்தது கதை. விரக்தியின் உச்சத்துக்கே சென்று விடுவர். செய்த கருமங்கள் இப்போவாவது கழிந்தனவே என்று நினைத்து அடுத்து அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும்.

ஏராளமான நிஜ சம்பவங்கள், நம் வாசகர்கள் அனைவருக்கும் பெரிய படிப்பினையாக இருக்கும். அதைப் கொஞ்சம் கொஞ்சமாக பின்வரும் கட்டுரைகளில் காணலாம்.

இன்று நாம் பார்க்க விருப்பது , இன்றைய நடைமுறை ஜோதிடர்கள் - பொதுவாக விதிப்படி காணும் விஷயங்கள். நமக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். ஆனால், ஒரே ஒரு விஷயம் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். ஜோதிட விதிகள் உங்களுக்கு தெரிந்து கொள்ள மட்டுமே. ஆனால், இறை வழிபாடும், குருவருளும் இருந்தால் , ஒரு ஜாதகத்தை பார்க்கும் போதே உங்களுக்கு விதிகளையும் தாண்டி , ஒரு சில பலன்கள் உங்கள் காதுகளில் யாரோ ஒருவர் ஓதுவதுபோல ஒலிக்கும். அவற்றில் பெரும்பாலானவை விதிகளுக்கு முரண்பட்டு இருந்தாலும் , முற்றிலும் உண்மையாகவும் இருக்கும். அந்த ஜாதகர் நீங்கள் கூறம் ஒரு குறிப்பிட்ட பலனைக் கேட்டு , அப்படியே ஆடிப்போய் விடுவர். அதற்க்கு அந்த ஜோதிடர் , முறையான பயிற்சி மேற்கொண்டு , இறை வழிபாடு செய்தலும் அவசியம். ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

சூரியன்: மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.

செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.

புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.

சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.

சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.

ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.

நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்:

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத் துடன், நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய ஜாதி சிகப்பு பவளத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவிற்குரிய கனக புஷப ராகத்தை நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள்; வரும்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவுக்கு உரிய கனக புஷபராகத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய சிகப்பு பவளத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன்; இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரக தத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சந்திரனுக்குரிய ஜாதி முத்தினை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சூரியனுக்குரிய மாணிக்கத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

கிரகங்களும் - அவற்றை சாந்திசெய்யும் நவரத்தின கற்களும்:
சூரியன் - மாணிக்கம்
சந்திரன் - ஜாதி முத்து
செவ்வாய் - சிகப்பு பவளம்
புதன் - மரகதம்
குரு - கனக புஷபராகம்
சுக்கிரன் - வைரம்
சனி - நீலம்
ராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்

இரண்டு ரத்தினங்களை இணைக்கும்போது, அவைகளுக்குள் பேதை ஏற் படுமானால், நடுவில் ஏதேனும் சாதாரண கல்லினை வைக்க வேண்டும். மோதிரம் அடியில் திறப்புடன் ஓபன்- செட்டிங் முறையில் அமைக்கப்பட வேண்டும். நோயின் தாக்கம் தீர்ந்தவுடன், மோதிரத்தை எடுத்துவிட வேண் டும். மேலே குறிப்பிட்டவை பொதுவானது ஆகும்.

தனிப்பட்ட ஜாதகங் களில், கிரகங்களின் நிலையை ஆராய்ந்து, நவரத்தினங்களை உரிய முறையில் அணிந்து, நன்மைகளைப் பெறலாம்.
 எண் கணிதம் கொஞ்சம் தெரிந்து கொள்வதும் , ஒரு நல்ல ஜோதிடருக்கு அழகு. எந்த வகையில் எண் கணித ஞானம் வேண்டும் என்பதை மூன்றாம் எண்ணை , குரு பகவானை , ராசி கற்களை உதாரணமாக  வைத்து இன்று பார்க்கலாம். மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் , மூன்றாம் எண் குருவிற்கு உரியது.3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3ஆம் எண்ணாகும்.
இந்த மூன்றாம் எண்காரர்கள் பொதுவாக வசீகரமானவர்கள். ஆண்கள் கம்பீரமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். சிலர் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடன் இருப்பார்கள்
ஜோதிடமாகட்டும் அல்லது எண் ஜோதிடமாகட்டும், குருவிற்கு முக்கியமான பங்கு உள்ளது. சூரியனிட மிருந்து தான் பெறும் சக்தியைவிடப் பன்மடங்கு சக்தியை வெளிபடுத்தும் கிரகமாகும் அது.C G L S என்கிற எங்கள் குரு பகவானுக்கு உரிய எழுத்துக்கள். நீங்கள் தொழில் தொடங்க ஆலோசனை கூறினால் , குருவுக்குரிய இந்த எழுத்துக்களில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். 

நியாயத்தையும், தர்மத்தையும் போதிக்கும் கிரகம் அது. அதனால்தான் அதற்குப் பிரஹஸ்பதி அல்லது வாத்தியார் என்ற பெயரும் உண்டு. பண்டைய நூல்கள் குருவை முக்கியப்படுத்திப் பல செய்திகளைச் சொல்கின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் குருவிற்கு நட்புக் கிரகங்களாகும். தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குருவிற்குச் சொந்த இடங்களாகும். கடகம் உச்சமான இடம். மகரம் நீசமான இடம்.

பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டிற்குக் காரகன் குரு. தந்தைக்குக் காரகன் சூரியன் என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின் மற்ற செயல்பாடுகளுக்கெல்லாம் குருவே அதிபதி.

ஒன்பதாம் வீடுதான் அதிர்ஷ்டத்தைக்குறிக்கும் வீடு. அதிர்ஷ்டத்திற்கு அதிபதி குரு. அதை மறக்க வேண்டாம். ஜாதகத்தில் குரு, கேந்திர கோணங்களில் இருப்பது நன்மை பயக்கும்!

நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும் குருவின் அமைப்பு முக்கியம். பெண்ணின் ஜாதகத்தில் குருவின் அமைப்பைவைத்துத்தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான். ஜாதகத்தில் குரு மறைவிடங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.

சனி, ராகு அல்லது கேதுவுடன் கூட்டாகவோ அல்லது எதிரெதிர் பார்வையுடனோ இருக்கும் குருவால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மிதுனம், கன்னி லக்கினக்காரர்களுக்கு, அதுபோன்ற அமைப்பு இருந்தால், சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும்.

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கடினமான உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள். தங்களைத் தாங்களே பலவிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம் என்பது சிறிதும் இருக்காது. அதீதமாகப் பொருள் ஈட்டக்கூடியவர்கள். அதாவது சம்பாதிக்கக்கூடியவர்கள்.

அறவழிகளில் ஈடுபாடு உடையவர்கள். கடமையே வெற்றிக்கு வழி என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஓய்வு என்று சொல்லி ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். செய்யும் வேலை அலுப்பைத் தந்தாலும், அதை விடாது செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள்.

எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.

ஆரோக்கியமான உடற்கட்டு இருக்கும். வாழ்க்கையுடன் இயைந்து போவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியை உடையவர்கள். நகைச்சுவை உணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத் தூண்டுதலாக விளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.

ஒற்றிலக்க எண்களில் - அதாவது 1,3,5,7,9 எனும் எண்களில் 3ஆம் எண்தான் அதிக சக்தியுள்ள எண். கடுமையான உழைப்பினால், சிலருக்கு, மன அழுத்தங்கள் உண்டாகும். சில இடையூறுகள் ஏற்படும். ஆனால் இந்த எண்ணிற்கு இயற்கையாகவே உள்ள அதிர்ஷ்டம்தரும் அமைப்பினால், அவைகள் எல்லாம் அவ்வப்போது களையப்பட்டுவிடும்.

தேவையானபோது இந்த எண்காரர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். செய்யும் வேலையில் அல்லது தொழிலில் தலைமை ஏற்கும் நிலைக்கு உயர்வார்கள்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்: 3,12, 21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். வியாழக்கிழமை உரிய கிழமையாகும். அதுபோல திங்கள், செவ்வாய் & புதன் கிழமைகளும் இந்த எண்காரர்களுக்குச் சாதகமான கிழமைகளே!

இந்த எண்காரர்களுக்குச் சாதகமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறத்தில் துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணை உறை, கைக்குட்டை என்று எல்லாவற்றிலும் மஞ்சள் நிறத்தையே போற்றி வைத்துக்கொள்ளலாம்.

நவரத்தினங்களில் மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் நன்மை பயக்கும்!
உடல் நலம்: இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சள்க் காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த எண்காரர்களின் வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகிய வயதில் வாழ்க்கை ஏற்ற முடையதாக இருக்கும்

 

 

குழந்தை பாக்கியம்

1. அறிவான குழந்தை பாக்கியம் :

1. 5ம் பாவாதிபதி சபக்கிரக தொடர்புடன்-சுப கிரக இராசியில் இருத்தல்.

2. 5ம் பாவாதிபதியின் இருபுறமும் சுப கிரகமிருத்தல்.

3. 5ம் பாவாதிபதி உச்சமடைந்திருத்தல்.

4. குரு - கோணங்களில் இருத்தல்.

5. 5ம் அதிபதி சுபர் வீடுகளாகிய ரிஷபம்,துலாம்,மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்,கடகம்,இதில் இருத்தல்.

6. புதன் 5 ல் இருத்தல்.

7. 5ம் அதிபதி உச்சமடைதல்.

8. 5ம் அதிபதி கேந்திரத்தில் இருத்தல்.

9. குரு தன் ராசிகளான தனுசு,மீனம் இவைகளில் ஜாதகத்தில் இருந்து,அது போல் நவாம்சத்திலும் தனது சொந்த வீட்டில் இருத்தல்.


2. பிள்ளைகளால் பெற்றோர் சஞ்சலமடையும் யோகம் :

1. 5ம் பாவம் சிம்மராசியாகி அதில் சனி,செவ்வாய் இருத்தல்.

2. 5ம் அதிபதி 6ல் இருத்தல்.

3. 5ம் பாவம் செவ்வாய் வீடுகளாக அமைந்து அதை செவ்வாய் பார்ப்பது.

4. 5ம் பாவம் செவ்வாய் வீடுகளாகிய அமைந்து அதில் ராகு இருந்து செவ்வாய் தொடர்பு ஏற்படுதல்.

5. குரு நீச்சமடைவது.

6. 5ம் பாவத்தில் சனி இருத்தல்.

7. 5ம் பாவத்தில் 3க்கு மேல் பாவ கிரகங்கள் இருத்தல்.

8. 5ம் பாவத்தில் குரு இருந்து அதை சுக்கிரன் பார்த்தால்-கூடி இருத்தல்.

9. 5ம் பாவம் குருவின் ராசிகளான தனுசு,மீனமாக இருத்தல்.

10. குரு இருக்கும் ராசிக்கு 5ல் பாபிகள் இருத்தல்.


3. தாமத குழந்தை பாக்கியம் :

1. லக்ன அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12ல் இருத்தல்.

2. 5ம் பாவ அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12ல் இருத்தல்.

3. 9ம் பாவ அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12 ல் இருத்தல்.

4. அதிக சுப கிரகங்கள் 10ம் பாவத்திலும் அதிக பாப கிரகங்கள் 5ல் இருத்தல்.

5. குரு 4 அல்லது 5ல் 8ம் பாவத்தில் சந்திரன் இருப்பது.

6. பாப கிரகங்களின் ராசிகள் லக்னமாக அமைவது.

7. ஆட்சி பெற்ற சந்திரன் பாப கிரகத்தோடு சேர்தல்-பார்த்தல்-தொடர்பு.

8. சூரியன்,சனி சமசப்தமாக இருத்தல்.

9. 11ம் பாவத்தில் ராகு இருத்தல்.

10. 5ல் குரு,5ம் அதிபதி சுக்கிரனுடன் சேர்தல்-பார்த்தல்-தொடர்பு.


4.தாய்-தந்தை-குழந்தை ஜாதக ஒற்றுமை :

1. தாய் அல்லது தந்தை ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 1-5-7-9ல் குழந்தையின் ஜன்ம லக்னம் அல்லது சந்திரன் இருக்கும்.

2. தாய் அல்லது தந்தை ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 1-5-9ல் குழந்தையின் ஜன்ம லக்னமாய் அல்லது சந்திர ராசியாக இருக்கும்.

3. தாய் அல்லது தந்தை ஜன்ம லக்னம் குழந்தைக்கு சந்திர ராசியாக இருக்கும்.

4. தாய் அல்லது தந்தை சந்திர ராசி குழந்தைக்கு ஜன்ம லக்னமாக இருக்கும்.

5. தாய் அல்லது தந்தையாருக்கு சூரியன் இருக்கும் அதே பாவத்தின் குழந்தையின் லக்னம் அல்லது சந்திர ராசியாக இருக்கும்.


5. ஆண் குழந்தை யோகம் :

1. 5ம் பாவம் மேஷம்,ரிஷபம்,கடகமாக இருத்தல்.

2. 5ம் அதிபதி,5ம் பாவம்,சுப கிரக தொடர்பு-சேர்க்கை-பார்வை.

3. குரு சுபக் கிரக சேர்க்கை-தொடர்பு.

4. லக்னாதிபதி 5ல்,5ம் அதிபதி குரு சேர்க்கை-தொடர்பு.

5. லக்னாதிபதி 5ம் அதிபதியைப் பார்ப்பது.

6. லக்னாதிபதி 5ம் அதிபதி சேர்ந்து கேந்திரங்களில் இருத்தல்.

7. லக்னாதிபதி 5ம் அதிபதி 9ம் அதிபதி மூவரின் சேர்க்கை-பார்வை-தொடர்பு.

8. லக்னம் அல்லது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 5மிடம் சுப ராசியாகி,அதில் சுபகிரகம் இருத்தல்.

9. 5ம் பாவம் ஆண் ராசிகளாக இருத்தல்.

10. லக்னாதிபதியும் 5ம் அதிபதியும் பரிவர்த்தனை-வர்க்கோத்தும் அடைதல்.


6. பெண் குழந்தை யோகம் :

1. 5ம் பாவம் பெண் ராசிகளாக அமைவது.

2. 5ம் பாவத்தில் சுக்கிரன்-சந்திரன் இருத்தல்.

3. 5ம் பாவாதிபதியுடன் சுக்கிரன்-சந்திரன்,தொடர்பு-பார்வை-இணைவு.

4. 5ம் பாவாதிபதி 2 அல்லது 8ல் இருத்தல்.

5. 11ம் ராசியில் புதன்-சந்திரன்-சுக்கிரன் இருத்தல்.


7. முதலில் ஆணா? பெண்ணா? யோகம் :

1. லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 2ல் அல்லது 3ல் முதலில் ஆண் குழந்தை.

2. உபய ராசியில் சந்திரன்-செவ்வாய்-சுக்கிரன் முதலில் ஆண் குழந்தை.

3. 5ம் அதிபதி ஆண் கிரகமாகவும் அது ஆண் ராசிகளில் இருந்தும்,ஆண் ராசி நவாம்சடைந்திருந்தால் முதலில் ஆண்.

4. 5ம் அதிபதி பெண் கிரகமாகவும் அது பெண் இராசிகளில் இருந்தும்-பெண் ராசி நவாம்சத்தையும் அடைந்திருந்தால் முதலில் பெண்.

5. 5ல் சந்திரன்-சுக்கிரன் இருவரும் சேர்ந்து இருந்தால் முதலில் பெண்.